Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சாலையில் நடந்த கோர விபத்து….!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள  ஓணான்குட்டை பகுதியில் ஐஸ் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூருக்கு சென்று கொண்டிருக்கும் போது பேரணாம்பட்டு சாலையில் வந்த நிலையில் முன்னாள் சென்ற டிராக்டரை முந்த முயன்றதால் நிலைதடுமாறி டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வியாபாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |