Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்துயுள்ளனர். இதனை அடுத்து விசாரணை செய்த போது அவர் ஷமில் என்பதும், 3 பகுதிகளில் மொத்தமாக 1௦ மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷமிலை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் பல இடங்களில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |