Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பதிவாகி இருந்த காட்சி…. ஊழியர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

காவல்துறையினரின் கண்முன்னே மருத்துவமனை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்டபாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எக்ஸ்ரே பிரிந்து இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியை செய்வதற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை நேரத்தில் பணியை முடித்து விட்டு அங்கிருந்து செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்துள்ளார். அப்போது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் அவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது காவல்துறையினரின் கண் முன்னே நடந்து வந்த ஒரு திருடன் மருத்துவமனை ஊழியரின் மோட்டார் சைக்கிளை துணிச்சலாக திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து பெருமாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |