லாரி உரிமையாளரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 1 1/2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியில் லாரி உரிமையாளரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கின்ற பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர்கள் குணசேகரனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது குணசேகரனிடம் மர்மநபர்கள் பணம் கீழே விழுந்து உள்ளதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே சிதறிக் கிடந்த பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர்கள் குணசேகரன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 1 1/2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து விட்டு தலைமறைவான மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.