Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. முதியவர் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காயரம்பேடு மூலக்கழனி தங்கப்பா அவென்யூ பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவிலிருந்து இறங்கி காயரம்பேடு கூட்ரோடு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தனை அருகில் இருப்பவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோவிந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |