மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூத்தாக்குறிச்சி பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவர் மதுக்கூர்-அதிராம்பட்டினம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிரும்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பக்கிரிசாமி தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதனையடுத்து பக்கிரிசாமி அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பக்கிரிசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவருடைய தம்பி ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.