மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கோவளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது.
இதில் தூக்கி எறியப்பட்ட ஆஸ்டின் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.