Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விற்றதில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக இடம் இல்லாததால் அங்கு இருக்கக்கூடிய காலி இடங்களில் தங்கி படுத்து உறங்குவது வழக்கம். இவருடைய நண்பர் ராஜா ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் சொந்த இடம் இல்லாததால் கணேசனுடன் சேர்ந்து அங்கு உள்ள காலியான இடத்தில் தங்கிக் வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து சைக்கிள் ஒன்றை திருடி அதை விற்று அந்த பணத்தில் மாலை வேளையில் மது குடித்துவிட்டு போதையில் பணம் குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறில் ஆத்திரமடைந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி காவல்துறையினர் கொலை வழக்கில் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |