மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலவனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் மகள் ஜீவா வசித்து வருகின்றார். இவர் திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அப்துல் கலாம் நகர் அருகில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜீவாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனர்.
இதனால் ஜீவாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.