Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நம்பி சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மூதாட்டியிடம் பொய்க் காரணம் கூறி நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அதே நகரில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டியிடம் அவரது மகனின் நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார். இதனையடுத்து ராமலட்சுமியிடம் உங்களது மகனுக்கு வங்கியில் 75 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடன் தொகையை பெற்று உங்களிடம் தருமாறு சொன்னதாகவும் கூறி மோட்டார் சைக்கிளில் மூதாட்டியை அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் சூலக்கரை அருகில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு இறங்கி வாலிபர் மூதாட்டியிடம் தங்க நகை அணிந்து சென்றால் வங்கியில் கடந்த யோசிப்பார்கள் என்று நகைகளை கழற்றி தருமாறு கூறியுள்ளனர்.

அதனை நம்பி ராமலட்சுமியும் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கையில் கிடந்த வளையலை கழற்ற முடியாததால் அந்த வாலிபர் மூதாட்டியின் கையில் கிடந்த வளையலை மிகுந்த சிரமப்பட்டு கழற்றி எடுத்துள்ளார். அதன் பின்னர் ராமலட்சுமியை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு வாலிபர் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து பறி கொடுத்த 6 பவுன் நகை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமலட்சுமியை அந்த வாலிபர் சந்தித்த இடத்திலுள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு நூதன முறையில் நகைகளை மோசடி செய்த அந்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |