சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் அண்ணாநகரைச் சேர்ந்த நசுருதீன் என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நசுருதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.