Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை.

ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு எண்களின் பதிலடி இருக்கும்.எந்த உள் நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பியது இல்லை.  அதேபோல் எண்களின் உள்நாட்டு விவகாரம் காஷ்மீர் தொடர்பாக வேறுயாரும் தலையிடக்கூடாது  என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Categories

Tech |