காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது நிற்காமல் அங்குள்ள புளியமரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கனகராஜூம் மற்றும் காரில் பயணித்தவர்களும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்த போது அவர்கள் வெள்ளாகுளம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன், மகேஷ் குமார் மற்றும் கனகராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதில் மகேஷ் குமார் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து மருத்துவமனையில் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மகேஷ்குமாரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.