Categories
உலக செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் மோதல்…. பதிலடி கொடுத்த இஸ்ரேல்…. வெளியான முக்கிய தகவல்….!!

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய இடங்களை குறிவைத்து அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

ஜெருசலேம் தொடர்பான பிரச்சினையினால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல காலங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக இஸ்ரேல் நாட்டிற்கும் காஸா நகரிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர்கள் 2 நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டை நோக்கி வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். ஆனால் இஸ்ரேல் அரசாங்கம் ஹமாஸ் அமைப்பினர்கள் அனுப்பிய ராக்கெட்டை நடுவானில் வைத்தே செயலிழக்க செய்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் அரசாங்கம் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களின் பல முக்கிய பகுதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

Categories

Tech |