Categories
உலக செய்திகள்

கடுமையாக நிலவிவரும் மோதல்…. சடலமாக கிடந்த 3 ஆண்கள்…. பீதியிலிருக்கும் பொதுமக்கள்….!!

தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டில் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 3 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் Nangarhar என்னும் மாவட்டத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்கள்.

இதனையடுத்து ஆப்கனிலுள்ள nangarhar என்னும் மாவட்டத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், தற்போது அந்நாட்டைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் nangarhar மாவட்டத்தில் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 3 ஆண்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |