Categories
உலக செய்திகள்

கடுமையாக நிலவி வரும் மோதல்…. அதிரடியாக களமிறங்கிய அதிபர்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடுகள்..

கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எத்தியோப்பியாவின் பிரதமர் அந்நாட்டை கைப்பற்ற முயற்சிக்கும் போராளிக் குழுக்களுக்கு எதிராக எத்தியோப்பிய ராணுவத்தை வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அக்கண்டத்திலேயே அதிகமான மக்கள் தொகையை கொண்ட எத்தியோப்பியா அமைந்துள்ளது. ஆனால் எத்தியோப்பியாவில் டைக்ரே போராளிக் குழுக்களுக்கும் அந்நாட்டின் ராணுவ படைகளுக்குமிடையே போர் நிலவி வருகிறது.

ஆகையினால் அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அந்நாட்டின் பிரதமர் போராளி குழுக்களுக்கு எதிராக எத்தியோப்பிய இராணுவத்தை வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் எத்தியோப்பிய நாட்டின் போருக்கு ராணுவ அடிப்படையில் தீர்வு காண்பது என்ற முடிவு சரியானது அல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |