பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசு பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன்படி தினந்தோறும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 24 முதல் 27 மாகாணங்களில் தலிபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையேயான மோதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற மோதல்களில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி நடந்த மோதலில் தலிபான்கள் மொத்தமாக 364 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.