Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூ மார்க்கெட்…. மொத்தம் 4 டன் விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ 577 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகை பூ கிலோ 577 ரூபாயும், முல்லை 180 ரூபாயும், காக்கடா 125 ரூபாயும், செண்டுமல்லி 30 ரூபாயும், பட்டுப்பூ 30 ரூபாயும், ஜாதிமல்லி 350 ரூபாயும், கனகாம்பரம் 350 ரூபாயும், சம்பங்கி 15 ரூபாயும், அரளி 40 ரூபாயும், துளசி 35 ரூபாயும், செவ்வந்தி 80 ரூபாயும் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |