Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 கிலோ …. வசமாக மாட்டிக்கொண்ட 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

 நாகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற  4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பள்ளி-வேதாரண்யம்  சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான பசுபதி தலைமையில், சிறப்பு போலீஸ் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப்பை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த ஜீப்பில்  ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீப்பில் இருந்த 4 பேரிடம்  காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர்  கோடியக்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், ராஜ்மோகன் மற்றும் ரவி என்பதும் மற்றொருவர்  மேட்டுத்தெருவை சேர்ந்த பழனிசாமி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.  இவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழையூர் காவல்துறையினர் சுரேஷ்குமார் ராஜ்மோகன் ரவி மற்றும் பழனிசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா மற்றும் ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |