Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை அடமானம் வைத்த கணவர்…. தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடிப்பதி பகுதியில் லாரி டிரைவரான மாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 7 வயதில் யோகஸ்ரீமதி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாது வருமானத்தை வீட்டில் கொடுக்காமல் மது குடித்துள்ளார். இதனால் தீபா தினமும் தனது ஸ்கூட்டரில் போச்சம்பள்ளியில் இருக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று செலவுகளை சமாளித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவின் ஸ்கூட்டரை மாது மது குடிப்பதற்காக அடமானம் வைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மகளை கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு தீபாவும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீபா மற்றும் யோகஸ்ரீமதியின் சடலங்களை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாது, அவரது தாய் செல்வி, சகோதரர் சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |