Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்… தாய்-மகள்களுக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தனது இரண்டு மகள்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் சுரேஷ் என்ற அரிசி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரம்யா, ஆர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனா மற்றும் அவரது இரு மகள்களுக்கு உறவினர் ஒருவர் தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த உறவினர் சாப்பாடு கொடுக்க வந்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனை அடுத்து நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த உறவினர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மயங்கி கிடந்த தாய் மற்றும் இரண்டு மகள்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் புவனா மற்றும் அவரது இரு மகள்களும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஏழுகிணறு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தனது கணவரின் இழப்பை தாங்கமுடியாத சோகத்தில் புவனா தனது இரண்டு மகள்களுடன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |