Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அவள் ரொம்ப பாசமா இருப்பா” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். தனியார் பட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்புக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்த தம்பதியினருக்கு சங்கீதா,புவனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்  ரேணுகாவின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில் தனது அம்மாவின் உடல்நலம்  குறித்து புவனா  மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அன்பு வேலைக்குச் சென்ற நிலையில் சங்கீதா பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் பார்த்தபோது ரேணுகாவும், புவனாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய்-மகள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது புவனா தன் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால் அவருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |