சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் – மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று காலை 9:40 மணியளவில் இலங்கையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் மதுரைக்கு 70 பயணிகளுடன் ஏர் லங்கா விமானம் வந்தது.
இதில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவர்களிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பிரதீபா மற்றும் அவர்களின் மகள் ரிகா என்ற குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதிபா மற்றும் ரிகாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்.
பிரதீபாவின் கணவர் சுப்ரமணியம் சீனாவில் வேலை பார்த்து வருவதால், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோர் சீனாவில் இருந்தனர். தற்போது சுப்பிரமணியன் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளதால் குடும்பத்தினர் தமிழகம் திரும்பிய நிலையில், நேற்று காலை மதுரை வந்தபோது குழந்தைக்கு மற்றும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களை சுகாதாரத்துறை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விமானத்தில் வந்த 70 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.