Categories
தேசிய செய்திகள்

7 வயது மகனை கொன்று விட்டு… தாய் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது ஷோபாராணி. இவருக்கு திருமணம் ஆகி விஷால்(7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் விஷாலை, ஷோபாராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உள்ளார். ஆனாலும் விஷாலுக்கு சரியாகவில்லை. இதன்காரணமாக ஷோபாராணி மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடி கொண்டு இருந்த விஷாலை, தண்ணீர் தொட்டியில் முக்கி ஷோபாராணி கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாகேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷோபாராணி, விஷாலின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாகேபள்ளி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்த ஷோபாராணி, விஷாலை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இது பற்றி பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதித்த மகனை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகேபள்ளியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |