Categories
உலக செய்திகள்

2 வயது குழந்தைக்கு ஏற்பட்ட நிலை.. மகனின் நிலை குறித்து கண்ணீருடன் கூறிய தாய்..!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் தன் 2 வயது மகன் பற்றி ஒரு தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாநிலத்தைச் சேர்ந்த Makayla Hunziker என்ற பெண் தன் இரண்டு வயது மகனான கிரேசன் குறித்து மிகுந்த வருத்தமாக கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, என் மகன் பிறந்த ஒரு மாதத்திலிருந்து மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலையக்கூடிய நிலை ஏற்பட்டது.

என் மகனுக்கு பல தடவை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வருடத்தில் ஜூலை மாதத்தில் வாழ்க்கையில் மிக கடினமான சூழலை எதிர் கொண்டதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், என் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஆனால், என் மகனுக்கு மட்டும்  கொரோனா பாதிப்பு ஏன் ஏற்பட்டது? என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், சிறுவனின் நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

மேலும், சிறுவன் மூச்சு விட சிரமப்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, சிறுவன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பியிருக்கிறார்.  மேலும், சிறுவன் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக Makayla தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |