Categories
உலக செய்திகள்

தாய்,மகள் உயிரிழப்பு… காரணம் எனது தந்தையே…. இன்னொரு மகள் புகார்…!

பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர்களைக் கொன்று தமது குடியிருப்பில உள்ள முற்றத்தில் புதைத்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இறந்த மனைவி மற்றும் ஒன்பது வயது குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், கிரிஸ்டியன் அரினா  கத்தியால் தாக்கப்பட்டும், ஒன்பது வயது மகள் தலையில் அடிக்கப்படும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவான பேப்ரிசியோவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |