Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாய் – மகள்கள் எடுத்த விபரீத முடிவு…. உறவினர்கள் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

தற்கொலை செய்து கொண்ட தாய் – மகள்களை ரகசியமாக எரிக்கப்பட்ட விவகாரத்தில 6 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிமணி என்ற மனைவியும், 2 – மகள்களும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளின் மகள்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் குமரவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு காசிமணிக்கு குமரவேலின் அண்ணனான கணேசன் என்பவர் அவ்வப்போது சந்தித்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 11 – ஆம் தேதியன்று கணேசன், காசிமணிக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை நீண்ட நேரமாகியும் காசிமணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணேசன் காசிமணி வீட்டிற்கு சென்று நேரில் பார்த்துள்ளார். அப்போது காசிமணி மற்றும் அவரது 2 மகள்கள் தூக்கில் சடலமாக கண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் 3 பேரின் உடல்களையும் கணேசன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ரகசியமாக எரித்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியான சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |