அர்ஜென்டினாவில் 30 வயது பெண் தன் 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவில் உள்ள Corrientes என்ற மாகாணத்தில் வசிக்கும் 30 வயது பெண் Mariana Ojeda. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மரியானா தன் மூத்த மகளை உறவினரிடம் விட்டுவிட்டு, மாலையில் அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
ஆனால் மாலையில் குழந்தையை அழைக்க Mariana வராததால் உறவினர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் அவரின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரும் மரியானாவிற்கு தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவரது மகன் தொலைபேசியை எடுத்து, அம்மா நீண்ட நேரமாக தூங்கி கொண்டே இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரின் கணவர் உடனே வீட்டுக்கு சென்று பார்த்தபோது Mariana தன் இரண்டு மாத குழந்தை மெத்தையில் இறந்துகிடப்பதைகண்டு அதிர்ந்துபோனார். மேலும் குழந்தையின் உடல் நீல நிறமாக இருந்துள்ளது.
அதன்பின்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரின் உடலும் உடற்கூறாவிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரணையின் அடிப்படையில் உயர் ரத்த அழுத்தத்தினால் அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் அப்போது குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்ததால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்பட்டிருக்கிறது.