பிரிட்டனில் தன் தாய் இறந்த தகவலை முகநூல் பக்கத்தில் யாரோ பதிவிட்டதன் மூலம் அறிந்து கொண்ட மகன் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பிரிட்டனில் நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில் வசிக்கும் 75 வயது மூதாட்டியான கில்லன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். இதனை அறிந்திராத அவரின் மகன் கெவின் சிம்சன், வெளியூரில் இருந்து கொண்டு, தாயார் தொலைபேசியில் அழைக்கவில்லையே என்று பதறியிருக்கிறார்.
அவர் மரணமடைந்த 3 நாட்கள் கழித்து, காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அவருடன் இருந்த நாயை காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் சிம்சன், தன் தாயின் தோழியிடம் விசாரித்திருக்கிறார். அவர் சரியான பதில் தெரிவிக்காததால் தாய் இருக்கும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் இல்லாததால் காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கு அவரின் வாகனம் மட்டும் இருந்திருக்கிறது. அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்று தன் தாய் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களின் முகநூல் பக்கத்தை பார்த்திருக்கிறார். அங்கு அவரின் தாய் சடலமாக மீட்கப்பட்ட தகவல் பதிவிடப்பட்டிருந்தது.
உடைந்து போன அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள், அந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் உங்களிடம் தகவல் தெரிவித்திருப்பார்கள் என்று நம்பி இருந்தோம் என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.