கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
அவ்வாறு தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளை பல வகையான நோய்கள் தாக்குவதற்கான அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் வரும் ஆபத்தை விட தாய்ப்பால் கொடுத்து பரவும் கொரோனா சிறிய ஆபத்துதான். எனவே தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் அதற்கான ஊக்கத்தைத் கொடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.