பிரபல சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி . இந்த சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகலா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குலதெய்வம்’ சீரியளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்நிலையில், இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CYgoQ4yvUZI/?utm_source=ig_embed&ig_rid=a7a9cf6e-6fb4-42b4-bdf5-384da2c2fcb4