Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து உயிரிழந்த தாய், தந்தை .! சிறுவனின் திடீர் முடிவு கண் கலங்க வைக்கும் சம்பவம்..!

தாய் மற்றும் தந்தையை  அடுத்தடுத்த இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவன் தனது மாற்றுத்திறனாளி அக்காவை கவனித்துக் கொள்ள பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மைசூர் மாவட்டம்  ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் -மஞ்சுளா இந்த தம்பதிகளுக்கு அனுஷா(17) என்ற மகளும் ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். ஆகாஷ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மஞ்சளாக மற்றும் குமார் இருவரும் உடல்நல குறைவினால் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இதனால் இவர்களின் இரண்டு குழந்தைகளான ஆகாஷ் மாற்று மாற்றுத்திறனாளியான அனுஷா ஆதரவற்றவர்களாயினர்.

இந்நிலையில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் ஆகாஷ் மாற்று திறனாளியான தனது அக்காவை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அக்காவை கவனித்து வந்தார்.

இந்த தகவல் தாசில்தார் மஞ்சுநாத்தின் கவனத்திற்கு சென்றது ,இது குறித்து ஆகாஸிடம் தாசில்தார் விசாரித்தார். இதை தொடர்ந்து தாசில்தார் மஞ்சுநாத் கூறுகையில்,சிறுவன் ஆகாஷ் பள்ளியில்  படிப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மாற்றுத்திறனாளியான அனுஷா மைசூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கபடுவார் என தெரிவித்தார்.

மேலும் அரசு சார்பில் இருவருக்கும் அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று கூறினார்.

Categories

Tech |