Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அடையாளம் OPS..! கூவத்தூர் அடையாளம் EPS… பொளந்து கட்டிய ADMKமகளிரணி …!!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,  ஓபிஎஸ் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர், அம்மாவுடைய உண்மையான விசுவாசிகள், அம்மாவிற்கு சில பிரச்சனைகள் வரும்போது அம்மா கை காட்டியது ஓபிஎஸ் அவர்களை தான், தவிர மற்றவர்களை இல்லை. அவர்கள் வந்த வழி எல்லோருக்கும் தெரியும்.

கூவத்தூரில் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடி. ஆனால் இப்போது ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்குகின்ற அளவிற்கு தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது ? என்று தெரியவில்லை.  எடப்பாடி இருந்தால் ஜனங்கள் வராது, ஓபிஎஸ்ஸிடம் சாதாரண தொண்டர்கள் கூட வந்து நிற்பார்கள். அவர் ஒரு கூட்டத்தை போட்டால் காசு கொடுத்து கூப்பிடுகிறார்கள்.

என்னை கூட அழைத்து பேசினார்கள், ஓபிஎஸ் இடம் போகாதீர்கள் எங்களிடம் வாங்கள் என்று அழைத்து பேசினார்கள். ஆனால் ஓபிஎஸ் தான் முக்கியம் என்று அவர் பின்னால் நின்றேன். கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான், நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான். மத்தபடி காசு கொடுத்து மாவட்டச் செயலாளர்களை தான் விலைக்கு வாங்க முடியும், தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. உங்களிடம் இருப்பவர்கள்….

பொறுப்பில் இருக்கின்ற நிர்வாகிகள் அவர்களெல்லாம் யார் ? நீங்கள் கொடுத்த காசுக்காக தான் வேலை செய்பவர்கள். ஆனால் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால் ஓபிஎஸ் ஆதரவாக காஞ்சிபுரத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறார்கள், என்னை தனியாக அழைத்து பேசுகிறார்கள், நாங்கள் உங்கள் தலைமையில் ஐயா உடன் இணைய தயாராக இருக்கிறோம், எங்களை அழைத்துப் போங்கள் அறிமுகம் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் ஈன தெரிவித்தார்.

Categories

Tech |