Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மரணத்தில்…! எல்லாமே ஓபிஎஸ், சசிகலா தான்… அரசு நடவடிக்கை எடுக்கணும்… AIADMK பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு  பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான்.

முதல்வராக இருகாது எல்லாமே  ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும்,  அதே போல ஓபிஎஸ் தான். அதை மீறி என்ன வந்தாலும் நான் சட்டப்படி சந்திக்கிறேன் என விஜய் பாஸ்கர் தெளிவுபடுத்திட்டாரு. இவங்க ரெண்டு பேரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில் தான் அந்த கமிஷனர் உடைய முடிவே இருக்கு.

தமிழக அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். ஒரு மிகப்பெரிய தலைவர், உலகம் போற்றக்கூடிய தலைவர், பெரிய அளவிற்கு சரித்திரத்தால் எழுதப்படக்கூடிய…  போற்றப்படக்கூடிய…. எல்லோரும் புகழக்கூடிய… வரலாற்று சிறப்புமிக்க தலைவருக்கு இப்படி நிலை ஏற்படுகிறது என்றால் ? பெரிய அளவிற்கு தமிழ்நாடே அந்தக் குரலை பார்த்து, கண்ணீர் சிந்த கூடிய வகையில் தான் இருந்தது என தெரிவித்தார்.

Categories

Tech |