Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு போக சொன்னா…. சாராய கடைக்கு போவியா…. கண்டித்த மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்….!!

தஞ்சாவூர் அருகே குடித்துவிட்டு வந்ததை கண்டித்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை அடுத்த கூப்புளிகாடு பகுதியில் வசித்து வந்தவர் மீனாம்பாள். இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவனை இழந்த மீனாம்பாள் கூலி வேலை செய்து தனது பிழைப்பை ஓட்டி வருகிறார். இவர் தனது கடைசி மகளான விமலா என்பவருக்கு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

துரைராஜ் பேராவூரணி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்த துரைராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்நிலையில் துறைராஜிடம் அவரது மாமியார் பணம் கொடுத்து வீட்டிற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான் உள்ளீட்டவற்றை வாங்கி வருமாறு கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் அந்தப் பணத்தில் பொருட்களை வாங்காமல் நன்கு குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் துரைராஜ்.

இதை கண்டதும் ஆத்திரமடைந்த மாமியார், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர பணம் கொடுத்தால் குடித்துவிட்டு வருவாயா? மளிகை கடைக்கு போக சொன்னால் சாராய கடைக்கு போவியா? என்று கண்டிக்க, ஏற்கனவே போதையில் இருந்த அவருக்கு மாமியாரின் கண்டிப்பு பிடிக்காமல் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் அவரது தலை, கை, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மீனாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீனாம்பாளின் மகள்களில் ஒருவரான ராஜேஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், துரைராஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |