பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் சோளிங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது 11 வயது மகனான மார்சலை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அதன்பிறகு சிறுவனிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு ரயிலிலிருந்து கிறிஸ்டினா தனியாக இறங்கியுள்ளார். பின்னர் வேகமாக சென்று ரயில் பாதையில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு சென்ற மார்சல் தாய் தனது ஐந்து தம்பி தங்கைகளுக்கு விஷம் கொடுத்ததை கூறியுள்ளான்.
உடனடியாக சிறுவனின் பாட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து சென்ற அவர்களால் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. இதனால் கிறிஸ்டினாவின் மகன்களான லூக்கா மற்றும் டீமோ மற்றும் மகள்களான சோபி, லியோனி, மெலினா ஆகிய ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் இதனிடையே தனது தாய் தம்பி தங்கைகளுக்கு விஷம் கொடுத்தது குறித்த தகவல் தனது தந்தைக்கு மார்சல் கொடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டினா 2014 ஆம் ஆண்டு தனது வீடு எறிந்து விட்டதாகவும் அதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். அதே போன்று தனது காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெற்ற குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்ததற்கான காரணம் அவர் கண் விழித்து பேசினால் மட்டுமே தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கினாலும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளாலும் அவரது கவலைகள் கவனிக்கப்படாமல் இருந்தாலும் கூட இவ்வாறு அவர் செய்திருக்கலாம் என்று குற்றவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.