தாயை கொலை செய்த குற்றத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பந்தல்குடி பகுதியில் முத்து கருப்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற மன நலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். இவர் பணம் கேட்டு அடிக்கடி தனது தாயை தொந்தரவு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி தனது தாயின் தலையில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில் கட்டையில் இருந்த ஆணி முத்துகருப்பியின் தலையில் குத்தியதால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.