நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
பின்னர் தேவி வேறு ஒரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில் அந்த நபர் திடீரென உயிரிழந்தார். அதன் பிறகு மூன்றாவதாக மகேஷ் என்பவரை திருமணம் செய்தார். இரண்டு மாதங்களுக்குப் முன்னர் மகேஷும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் நான்காவதாக திருமணம் செய்ய தேவி முடிவெடுத்தார். ஆனால் அதற்கு தனது மகன் சஜன் தடையாக இருப்பான் என்று நினைத்து அவர் நாலு வயது ஆன சஜன் குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
சிறுவனின் சடலம் தண்ணீரில் மிதப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தேவியை சிறையில் அடைத்தனர்.