செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடிய ஒரு செயல் தான். டிஜிபியிடம் நான் கேட்டேன், சாதாரணமாக ஒரு குற்றம் நடக்கிறது, அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடுகிறீர்கள், எஃப் ஐ ஆர் போட்டு விசாரிச்சு என்ன செய்கிறீர்கள் ? என்னென்ன செக்ஷன் இருக்கு ? அதெல்லாம் போட்டு கைது செய்கிறீர்கள்.
உதாரணத்திற்கு ஜனநாயக கடமையற்ற வந்த பொதுமக்களை, ஜனநாயக கடமை ஆற்ற விடாமல், ஓட்டு போட செய்ய விடாமல் செய்த ரவுடியை வைத்து காவல்துறையின் மீது கல் வீசி, பொது அமைதிக்கு இடையூறு விளைவித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து சட்ட ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்ட ஆளுங்கட்சியினுடைய ரவுடி, அந்த ரவுடியை பிடித்து கொடுத்ததற்கு என் மேல் எப்.ஐ.ஆர் போட்டு அன்றைக்கு இரவே கைது செய்தார்கள்,
எங்களுக்கு ஒரு சட்டம். ஆனால் இவ்ளோ பெரிய அளவிற்கு… நாங்கள் கோவிலாக வணங்கக்கூடிய புரட்சித்தலைவர் மாளிகையில் சூறையாடி, கொள்ளையடித்து, இருக்கின்ற அளவிற்கு சட்டவிரோத செயலெல்லாம் செய்து, ஆவணங்களை எல்லாம் தூக்கிக்கொண்டு போய், அவ்வளவு தூரம் செய்த பிறகு முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, முன்னாள் சட்ட அமைச்சர், அமைப்பு செயலாளர் நீதி மன்றத்துக்கு சென்ற பிறகுதான் உடனே கட்சி அலுவகத்துக்கு விசாரணைக்கு போகிறார்கள், அதுக்கு முன்னால எந்த நடவடிக்கையும் இல்லை.
சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே, அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்சுக்கு ஒரு சட்டம், ஜேசிடி பிரபாகரனுக்கு ஒரு சட்டம், மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சிபிசிஐடி வந்து கண்ணுக்குத் தெரிந்த சிசிடிவி கேமராவில் யாரெல்லாம் அங்கே உள்ளே வந்து கொள்ளையடித்து போனார்கள்,
பொருளை கொள்ளையடித்தார்கள் என்று கண்கூடாக தெரிகிறது. அவர்களுக்கு பென்டிரைவ் போட்டு கொடுத்தாச்சு, கொடுத்து இவ்வளவு தூரம் வழக்கு போட்டு, இன்னும் ஏன் அவர்களை பிடிக்கவில்லை, கைது செய்யவில்லை, அதுதான் இப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒவ்வொரு தொண்டனுடைய கேள்வி என தெரிவித்தார்.