Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்க….”மகளுக்காக தாய் எடுத்த முடிவு”…. நெகிழ்ச்சியான சம்பவம் …!!

மகளின் ஆன்லைன் கல்விக்காக தாய் கம்மலை வெற்றி ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜினி. கடந்த 30 வருடங்களாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறிய கொட்டகை ஒன்றில் வசித்து வரும் இவருக்கு ரேணுகா, பாபு என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாபு கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் விபத்தில் ஒன்றில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். ரேணுகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகன் பாபு தனது கால்களை இழந்ததன் காரணமாக குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சரோஜினி ஏற்க வேண்டிய நிலை உருவானது.

இந்நிலையில் கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டதால் மகளின் ஆன்லைன் படிப்பிற்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய நிலை உருவானது. பணத்தை மிகவும் சிக்கனமாகவே செலவு செய்து வாழ்க்கையை நடத்தி வந்த சரோஜினி தனது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வேறுவழியின்றி குழந்தையின் படிப்பை கருத்தில் கொண்டு தனது கம்மலை விற்று ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா தொற்று எங்களது குடும்பத்தை அதிக அளவில் பாதித்துள்ளது. குடும்ப பொறுப்புகள் அனைத்தும் என்னிடம் தான் இருக்கின்றது. எனது மகனையும் மகளையும் நல்ல விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் சவததி ரேணுகா தேவி மந்திர் பூட்டப்பட்டு உள்ளதால் போதிய அளவு சம்பாதிக்க இயலவில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் எங்களது வாழ்வுக்காக போராடி வருகிறேன்” என கூறி உள்ளார்.

 

Categories

Tech |