அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மகள் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார்.
பின் சுடப்பட்டது தான் பெற்ற மகள் என உணர்ந்தவர் பதறித் துடித்தார். கையில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாய் கூறுகையில், 18 வயதான தனது மகள் கல்லூரியில் படித்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு வருவதை சொல்லாமலேயே திடீரென இன்ப அதிர்ச்சி தரும் பொருட்டு நுழைந்தது தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பதற்றத்தில் யாரோ ஒருவனை சுட்டு விட்டதாகவும் தாய் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் தாயின் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் துப்பாக்கிச்சூட்டில் 40,000 பேர் பலியாகியுள்ளனர். அவற்றில் 1012 பேர் தவறுதலாக சுடப்பட்ட வழக்கில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.