‘வலிமை’ படத்தின் ‘மதர் சாங்’ பாடல் பாடியது குறித்து சித் ஸ்ரீராம் பேசியுள்ளார்.
அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ நேற்று வெளியானது. இந்நிலையில், இந்த பாடலை பாடிய சித் ஸ்ரீராம், ”வலிமை படத்தில் இந்த பாடலை பாடியது பெருமைக்குரியது எனவும், விக்னேஷ் சிவனின் வரிகளையும் ,யுவனின் இசையில் பாடும் அனுபவத்தையும் கொண்டிருக்கும் இந்த பாடல் அனைத்து அம்மாக்களுக்கும் காணிக்கை” என தெரிவித்துள்ளார்.