Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவள் ஏன் அப்படி பண்ணுனா…? குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திருச்சியில் நடந்த சோகம்…!!

மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் சௌந்தர்யா என்பவர் அதே பகுதியில் வசிக்கும் மகாமுனி என்ற வாலிபரை காதலித்துள்ளார். மேலும் இவர் அந்த வாலிபரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ததால் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மணிமேகலை திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |