கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விவசாயியான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற திருமலைக்குமார் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி திருமலைக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலைக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மகன் இறந்த வேதனையில் இருந்த பெரியதாய் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் மன உளைச்சலில் இருந்த பெரியதாய் அதே விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பெரியதாயின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.