மாற்றுத்திறனாளி மகளுடன் இணைந்து தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஸ்வரியின் மகனான பிரபுவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளியான தனது மகள் சத்யா உடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சத்யாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த உப்பிலியபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.