அன்னை தெரசாவின் ஓவியத்தை ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து உருவாக்கி கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் . இவர் அன்னை தெரசாவின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு சாதனை ஒன்றை மேற்கொண்டுள்ளார் . இவர் 8500 சதுர அடியில் அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைந்து , அவ்ஓவியத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து சாதனை புரிந்துள்ளார்.
மேலும் , அன்னை தெரசாவின் சேவை மனப்பான்மையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்ஓவியத்தை உருவாக்கியதாக கல்லூரி மாணவன் பிரவீன்குமார் கூறினார் . இந்த அன்னை தெரசாவின் நாணய ஓவியத்தின் மூலம் பிரவீன் குமார் உலக சாதனை படைத்துள்ளார்.