Categories
உலக செய்திகள்

பிஞ்சு குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய கொடூரம்.. நிர்வாணமாக கீழே குதித்த பெண்.. காரணம் என்ன..?

அமெரிக்காவில், இளம் பெண் ஒருவர் தன் பிஞ்சு குழந்தைகளை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு தானும் நிர்வாணமாக குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் என்ற பகுதியில் வசிக்கும் பெண் Dejhanay Jarrell (24). இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன் பிஞ்சு குழந்தைகள் இரண்டையும் வீட்டின் இரண்டாம் மாடியில் இருக்கும் ஜன்னல் வழியாக வீசி விட்டார். இதில் குழந்தைகள் ஆடைகளின்றி கீழே விழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவரும் ஆடையின்றி நிர்வாணமாக கீழே குதித்து விட்டார். அதன்பின்பு தன் குழந்தையின் தலையை தரையில் இடித்துவிட்டு, கதறியிருக்கிறார். இதற்கிடையில், சத்தம் கேட்டு ஓடிவந்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடமிருந்து, குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.

அதற்குள், காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து, பலத்த காயங்களுடன் கிடந்த  ஒரு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த பெண் மற்றும் மற்றொரு குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த பெண்ணின் மீது கொலை முயற்சி போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இப்படி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |