Categories
தேசிய செய்திகள்

” தாய்மொழியில் மருத்துவ கல்லூரி”… இது எனது கனவு… கல்லூரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு..!!

ந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என்பது எனது கனவு என அசாம் நிகழ்ச்சி ஒன்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள தேகியாஜூலி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 8210 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் மேம்படுத்தும் அசாம் மாலா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிஸ்வாந்த் மற்றும் சாரைடியோ மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் மருத்துவக் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அசாமில் உள்ள மாவட்டங்களில் தாய்மொழியில் மருத்துவ கல்லூரிகள், தொழிநுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அவர் கூறினார். மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ சேவை மேம்படும். சாமானிய மக்கள் கூட மருத்துவமனைக்கு செல்லாமல், மருத்துவர்கள் அவரை தேடி சென்று மருத்துவம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்படும் என அவர் கூறினார்.

Categories

Tech |