“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை.
அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் தாய் என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிக்கு சென்று, குடும்ப கஷ்டங்களை பகிர்ந்து, மனதில் கஷ்டம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் என்றும் அன்புடன் சிரித்துப் பழகும் குணம் அம்மா என்ற ஒருவரிடம் மட்டுமே காணமுடியும்.
அந்த அம்மாவை கொண்டாட ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறு கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் நமக்காக பல தியாகங்களை செய்து நம்மை அரவணைத்து வரும் தாயை ஆச்சரியப்படுத்த மகிழ்விக்க அன்று ஒரு நாளாவது அவர்களை ஓய்வு எடுக்கச் சொல்லி விரும்பியதை பரிசாகக் கொடுத்து அவர்களுடன் பொழுதைப் போக்கினால் அதைவிட மகிழ்ச்சி அவர்களுக்கு வேறொன்றுமில்லை.