செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சியை பொறுத்தவரை மக்கள் நலன்ல…. எல்லோருடைய நலன்ல அக்கறை கொண்ட கட்சி. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்ல. ஒரு அரசு செய்கிறதுக்கும், கட்சி செய்வதற்கும் வித்தியாசம் இருக்குல்ல. கட்சி பொருத்தவரைக்கும் ஒரு குறுகிய அளவில் செய்ய முடியும். கட்சியால் தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடி பேருக்கும் கொடுக்க முடியாது.
குறுகிய அளவுல எங்க கட்சிக்காரங்ககிட்ட சொல்லி, அந்தந்த மாவட்டத்துல, அரசாங்கம் கொடுக்க மறுத்துடுச்சு. நீங் பொங்கலுக்கு கரும்பு கொடுங்கன்னு சொல்லலாம். இது வந்து நாங்க செய்ற விஷயம் தான். ஆனால் ஏன் அரசாங்கம் பண்ணல ? அதான் எங்க கேள்வி. ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கை கொடுத்தாச்சு. திருமதி சசிகலா மற்றும் சிலர் மேல ஆக்சன் எடுக்கணும்னு அவருடைய அறிக்கையில் இருக்கு.
ஆக்சன் கண்டிப்பாக எடுக்கணும் என்பது தான் அதிமுகவின் நிலையும் கூட… ஆனால் வடிகட்டிய பொய்யை சசிகலா சொல்லிட்டு இருக்காங்க. ஆணையம் கூப்பிடும் போது இதனை சொல்லி இருக்கலாம்ல. சசிகலா ஜெயிலில் இருந்து வந்ததும், ஆணையத்திடம் சசிகலா சொல்லி இருக்கலாம்ல என விமர்சித்தார்.